வெம்பக்கோட்டையில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் சில பழங்கால பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read : அன்று துரைமுருகன்… இன்று செந்தில்பாலாஜி… TASMAC RAID-ல் முடிந்த DEAL?
தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது x தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
