அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய 4 பேர் கொண்ட குழுவை அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இக்குழு மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வகுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலை. மாணவரக்களுக்கு மாலை 6.30க்கு பின்னர் வெளியில் செல்லத் தடை .
மாணவர்கள் மாலை 6.30 மணிக்குள் விடுதிக்கு திரும்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்ய திட்டம்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் செக்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் காண்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படும்
விடுதிக்கு தாமதமாக வர நேரிட்டால் முன்கூட்டியே ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் கொடுக்க வேண்டும்.
தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.