மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ( environmental clearance ) சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது .
இதையடுத்து அந்த மருத்துவமனையை கட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததால் தென் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என அப்பகுதிகளை சார்ந்த மக்களும் அரசியல் தலைவர்களும் கேள்வி மேல் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர் .
மதுரை எய்ம்ஸில் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளே தற்போது நடந்து வருகின்றன; தமிழ்நாடு அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எய்ம்ஸில் நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது .
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மே 2ஆம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மே 10ஆம் தேதி இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைளுடன், ( environmental clearance ) பத்து தளங்களுடன் கூடிய கட்டுமான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.