ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட கவுன்சிலர் ஹரிதரன் கொடுத்த வாக்குமூலத்தின் படி வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசிய கொலையாளிகளின் செல்போன்களை தனிப்படை போலீசார் தேடி பறிமுதல் செய்துள்ளனர் .
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் வழக்கறிஞர்கள் அருள் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கு நெருங்கிய நண்பர் கவுன்சிலர் ஹரிதரன்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த பின் வழக்கறிஞர் அருள் 6 செல்போன்களை ஹரிதரனிடம் கொடுத்துள்ளார்.
அருள் கைது செய்யப்பட்ட பிறகு ஹரிதரனை தொடர்பு கொண்ட வழக்கறிஞர் ஹரிஹரன், அருள் கொடுத்த செல்போன்களை யார் கண்ணிலும் படாதவாறு உடைத்து வீசி விடச் சொல்லி உள்ளார். இதையடுத்து ஹரிதரன் செல்போன்களை உடைத்து வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசி உள்ளார்.
Also Read : உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு..!!
வழக்கறிஞர் ஹரிஹரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து, அதில் கிடைத்த தகவல் அடிப்படையில் வழக்கறிஞர் ஹரிதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தீயணைப்புத் மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி செல்போன்களை கைப்பற்றி உள்ளனர்.
இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் வீசப்பட்டுள்ளதா? என தனிப்படை போலீசார் இன்று 2வது நாளாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.