பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் “சம்போ” செந்திலைத் தேடி தனிப்படை போலீசார் மும்பைக்கு பறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 22க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தபோது என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.
ஒட்டுமொத்த ரவுடி கொம்பை ஸ்கெட்டுச் போட்டு நடத்திய இந்த படுகொலையில் ஏரளாமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் பிரபல ரவுடையான சம்போ செந்தில் இன்று வரை தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சம்போ செந்தில் மும்பையில் இருப்பதாக ரகசிய தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பைக்கு பறந்துள்ளனர்.
வெகுநாட்களாக காவல்துறை பிடியில் சிக்காமல் நழுவி வரும் சம்போ செந்தில் பிடிபடுவாரா என்பதை காத்திருந்து பாப்போம் .