Ban on 23 types of foreign dogs : 23 வகை நாய்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது..
06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது Ban on 23 types of foreign dogs.
12.03.2024 தேதியிட்ட மத்திய அரசின் அறிவிப்பின்படி வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான,
- பிட்புல் டெரியர்,
- அமெரிக்கன் ஸ்டப்போர்டு,
- ராட்வீலர்ஸ்
உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வகை நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும். ” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : “ஸ்டார்” திரைப்பட வெளியீடு குறித்து உருக்கமாக பதிவிட்ட இயக்குநர் இளன்!