கொரோனா பாதிப்பிலிருந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குணமடைந்த நிலையில் தற்பொழுது அவருடைய மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனை அடுத்து சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த போதும் சவுரவ் கங்குலி அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
நிலையில் தற்பொழுது அவருடைய மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.