அரசியலில் நான் அனுபவித்ததை தம்பி விஜய்யும் அனுபவிப்பார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது :
திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க ஒருவர் கூட பிறக்கவில்லை என்று சொல்கிறீர்கள். பிறக்காத எதிரிகளை கண்டு ஏன் பயப்படுகிறார்கள்? அதிகாரத்தில் இல்லாத பொழுது பேசிய பேச்சை ஆட்சிக்கு வந்தபின் பேச முடியவில்லை. ஏனென்றால் சொன்னது எதையும் செய்யவில்லை,ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு கொள்கை கோட்பாட்டை பேசக்கூடாது அது அங்கேயே செத்துவிட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா பேசும் பொழுது கூட இறுதி காலங்களில் காசு கொடுத்துதான் கூட்டத்தை கூட்டினார்கள். எனக்கு விழுந்த 36 லட்சம் வாக்குகளில் குறைந்தது 25 லட்சம் வாக்குகள் திமுகவில் இருந்து தான் விழுந்துள்ளது.
Also Read : “உங்களுக்கு பெரிய மனசுங்க” வயநாடு மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகைகள்..!!
300 பேர் படிக்கும் பள்ளி கல்லூரிகளில் 2 கழிவறைகள் தான் உள்ளது.மேற்கூரை இல்லாத பள்ளிகள், மரம் நிழலில் படிக்கும் பள்ளிகள் உள்ளது. கார் ரேஸுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிறார்கள். காசு கொடுத்து கூட்டம் கூட்டும் நீங்களே நம்பிக்கையாக இருக்கும்பொழுது தானா கூடும் கூட்டத்திற்கு நான் ஏன் அஞ்சவேண்டும்.
தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்கு ஒரு பெரிய அளவில் இடமில்லை, தமிழ்நாட்டில் பெரிய கூட்டம் கூடுவதற்கு இடமில்லை, தனியார் இடம் என்றால் உரிமையாளரை அழைத்து மிரட்டுவார்கள். அந்த நெருக்கடியை நானும் அனுபவித்தேன் தம்பியும் அனுபவிப்பார் வேறு வழி கிடையாது என சீமான் தெரிவித்துள்ளார்.