பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ( rajesh ) ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது .
இந்த தீர்ப்பை ஏற்கமறுத்த ராஜேஷ்தாஸ் இந்த தீர்ப்பை ரத்து செய்ய மேல் முறையீட்டு செய்தார் .
Also Read : ஈரோடு தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூமில் ஒரு சிசிடிவி திடீர் பழுது..!!
இந்த மனுவை கடந்த 23 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் முன்னாள் டிஜிபி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர் .
2021-ல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை மற்றும் 20,500 அபராதம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்ததை அடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி ( rajesh ) ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு இன்று தாக்கல் செய்துள்ளார். .