நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,720க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,686க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 232 குறைந்து ரூ.45,488க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,681 ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.37,448 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 23 குறைந்து ஒரு கிராம் ரூ.4,658ஆகவும், சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.37,264 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.