பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் வாசிகள் பெரும்பாலானோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கும் வேளைக்கு செல்வதற்கும் சென்னை மின்சார ரயில்கள் பிரதான போக்குவரத்து மையமாக திகழ்ந்து வருகிறது . தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்ளும் இந்த மின்சார ரயில்களில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் வழித்தடங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று .

அந்தவகையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று (29-11-2023) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரையான இரவு ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.