சென்னை ராயபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ப நபர்கள் சிவப்பு நிற பெயிட் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள காலிங்கராயன் பகுதியில் 1994-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா அவர்களால் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ப நபர்கள் எம்.ஜி.ஆரின் சிலை மீது குறிப்பாக முகத்தின் மீது சிவப்பு நிற பெயிண்டை ஊற்றிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் பகுதி செயலாளர் அரசு என்பவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் cctv காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் சிலைக்குக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் நேரில் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.