திருப்பதி ரயில் பணிமனையில் மேம்பாட்டு பணி நடப்பதால் சென்னை சென்ட்ரல் திருப்பதி செல்லும் ரயில்கள் வரும் 31ம் வரை ரேணிகுண்டா வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்: திருப்பதி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மே 15 முதல் 31ம் தேதி வரை ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இருவழித்தடங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை கோயில் நடை திறப்பு..!!
அதன்படி, சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் சப்தகிரி விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.