தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
டெல்டா மாவட்டங்களில்( Cauvery Delta)குறுவை சாகுபடிக்காக சிறு, குறு வாய்க்கால்களில் வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் ஆறுகள் மற்றும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,முதலமைச்சர் முகஸ்டாலின் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நீர்வளத்துறையின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
முன்னதாக காலை 9 மணிக்கு தஞ்சையை அடுத்த ஆலக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலை முத்துவாரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர், செங்கரையூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், விண்மங்கலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிடுகிறார்.
இதனை தொடர்ந்து திருச்சி செங்கரையூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், விண்மங்கலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிடுகிறார்.