சென்னை – பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் . இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் தான் புதிதாக காட்டிவந்த வீட்டை பார்க்க சென்ற ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
சென்னையில் உலுக்கிய இந்த படுகொலை சம்பத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.