முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி கே பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தில் அவரது மகனும் சென்றார் என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக அதிமுக சட்ட நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் திரு வி க நகர் தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இன்றைக்கு எடப்பாடி தலைமை ஏற்று 2 கொடி தொண்டர்களக உருவாக வேண்டும் என்று உறுப்பினர் சேர்க்கை தமிழ் நாடு முழுவதும் நடை பெறுகிறது.நாடளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் எதிர் கட்சி தலைவர் கலந்து கொள்வதற்கு அழைப்பு வந்துள்ளது.
கலந்து கொள்வது குறித்து அவர் முடிவெடுப்பார்.19 கட்சிகள் புறக்கணிப்பு குறித்து எங்களுக்கு தேவை இல்லை எங்களுக்கு அழைப்பு வந்தது நாங்கள் கலந்து கொள்கிறோம் என தெரிவித்தார்.
ஸ்டாலின் வெளிநாடு பயணம் போட்டோ ஷூட் செய்வதற்கு சென்றது போல உள்ளது.கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை கொண்டு வந்தது என தெரிவித்தார்.
ஸ்டாலின் காலையிலும் பொய் பேசுகிறார் மாலையிலும் பொய் பேசுகிறார்.வாயை திறந்தாலே பொய் மட்டுமே பேசுவதாக குற்றம் சாட்டினார்.ஆட்சிக்கு வந்து 700 நாள்கள் மேல் ஆகுது எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளிர்கள் என கேள்வி எழுப்பினார்.
இவர்களது ஆட்சியில் கடலூரில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தல் நிகழ்வு நடை பெற்றது.எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சியில் மக்களுக்கு கொடுக்க பட்ட சலுகைகள்அதிமுக ஆட்சி தான் தமிழக மக்களின் தொழில் வளர்ச்சிக்கு பொற்காலம்.
செங்கோல் என்பது தமிழ் நாட்டின் தொன்மை தொட்டு அடையாளமாக காணப்படுகிறது.தமிழன் பெருமை தமிழ் நாட்டின் பெருமை இதில் அரசியல் செய்ய கூடாது.மக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.எழுச்சியாக பேரணி மூலம் சட்ட ஒழுங்கு மற்றும் கள்ள சாராயம் குறித்து ஆளுநரிடம் தொகுத்து குடுதுள்ளோம்.
கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிளைக் கழக செயலாளர் ஆக இருந்து ஒன்றிய செயலாளராக மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் என இன்று பொதுச் செயலாளராக படிப்படியாக உயர்ந்துள்ளார் என தெரிவித்தார்.
துரோகத்தின் அடையாளம் கருணாநிதிதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மூலமாக தான் கருணாநிதி அடையாளம் காணப்பட்டார்.திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது.உலக தமிழ் பல்கலைகழகம் MGR ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
ஒரு பக்கம் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள்.மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக செயல்படுகிறது.அதிமுக ஆட்சியில் முதலீடு குறித்த வெள்ளையரிக்கை வெளியிட தாயார்.
2 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள் என்று கூற வேண்டும்.பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் வாங்குற அமைச்சர் உலகத்தில் இருப்பார்களா..?தங்கமணி அமைச்சராக இருந்த போது ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க வில்லை.
தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் செய்துள்ளது.