நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ (workout video) ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு மயோசிட்டிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக மனம் திறந்து பேசி இருந்தார். மேலும், அந்த கடினமான காலங்களில் கூட அவரது ரசிகர்களுக்கு சமந்தா நேர்மறையான கருத்துக்களையே கூறிவந்தார். மேலும், சமீபத்தில் சகுந்தலம் பட புரமோஷனிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ (workout video) ஒன்றை பகிர்ந்துள்ளார். சமந்தா புஷ் அப் செய்யும் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர்.
அதோடு, சமந்தாவிற்கு ஏற்பட்டிருக்கும் மயோசிட்டிஸ் நோயில் இருந்து சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நடிகை சமந்தா கடைசியாக “யசோதா” திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது அவரின் “சகுந்தலம்” மற்றும் “குஷி” ஆகிய படங்களின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து, தற்போது சமந்தா வருண் தவான் உடன் இணைந்து “சிடாடல்” படத்திலும் நடிக்கத் தொடங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.