நடிகர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வெற்றிக்கொண்டாட்டத்தை துவங்கியுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விக்ரம்’ படத்தைப் பற்றி புதிய தகவல்களும் வசூல் நிலவரங்களும் வந்தவண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அதோடு மலையாளத்தில் விக்ரம் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் விக்ரம் படத்தை ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்திருக்கிறார். படம் அருமையாக இருக்கிறது என்று படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் – கமல் இந்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து அவர் இயக்க இருக்கும் விஜய் படத்திற்கு சம்பளமாக ரூ.13 கோடி பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.