‘திமுக ஃபைல்ஸ் 3’ விரைவில் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
“சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், ‘திமுக ஃபைல்ஸ் 3’ம் பாகம் வெளியிடப்படும். அதில் திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியலில் பல விவகாரங்கள் அடுக்கடுக்காய் போர் தொடுத்து வரும் நிலையில் தற்போது வெளிநாடு சென்று அரசியல் குறித்த மேற்படிப்புகளை பயின்று வந்துள்ள அண்ணாமலை வந்த வேகத்தில் ஆளும் அரசு மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் தற்போது திமுக ஃபைல்ஸ் 3 மீண்டும் வெளியிப்படும் என கூறிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.