முதுமலையில் யானைகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று ( Mudumalai ) தொடங்கி உள்ளது.
நாட்டின் தென் மாநிலங்களில் ஆண்டுதோறும் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அதிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் யானைகள் அதிகம் இருக்கும் இடங்களில் பல குழுக்களாக பிரிந்து வண்துறையின் இந்த கணக்கெடுக்கும் பணியினை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
இந்நிலையில் சத்தியமங்கலம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தாளவாடி, ஜீரகள்ளி, தலைமலை, பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய 10 வனச்சரகங்களில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது .
இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . மேலும் 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர் .
இதில் அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் மட்டும் 37 குழுவினர் யானைகள் ( Mudumalai ) கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .