பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டுவிட்டர் நிறுவனத்தை தனது வசமாக்கி நினைத்ததை செய்து காட்டியுள்ளார் எலான் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். உறுப்பினர்கள் – எலான் மஸ்க் இடையே நடந்த ஆலோசனையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு வாங்கி உள்ளார் எலான் மஸ்க்.
மொத்த பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கியதன் மூலம் தற்போது பப்ளிக் நிறுவனமாக இருந்த ட்விட்டர் மீண்டும் பிரைவேட் நிறுவனமாக மாறி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் மீது நீண்ட காலமாகவே புகார் மழைகளை பொழிந்து வந்தவர் எலான் மஸ்க். அதன் நிறுவனர் ஜாக் வெளியேறிய பின் இந்த மோதல் இன்னும் பெரிதானது. ட்விட்டர் நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை. புகார் மேல் புகார் அங்கு கருத்து சுதந்திரம் இல்லை. ட்விட்டர் சிலருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் வழங்குகிறது என்பதே மஸ்க் வைக்கும் புகார். இதற்கு மாற்றாக முதலில் வேறு ஒரு செயலியை அவர் உருவாக்குவார் என்று கருதப்பட்டது.
ஆனால் ட்விட்டர் நிறுவனத்தையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்ற முடிவை மஸ்க் எடுத்தார். அதன் பொருட்டே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார். மதிப்பு என்ன? அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவராக இவர் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் போர்ட் உறுப்பினர்களில் ஒருவராக இணையாமல் மொத்தமாக அண்ட் நிறுவனத்தை கைப்பற்றும் முடிவை எலான் மஸ்க் எடுத்தார்.
அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை இந்திய மதிப்பில் ரூபாய் 4120 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளார். ஆலோசனை மொத்தமாக 100 ஷேரையும் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 37 பில்லியன். இதை மொத்தமாக 44 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்துள்ளார்.
ஆனால் இதை முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் இயக்குனர்கள் விரும்பவில்லை. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்காமல் தடுக்க அந்த நிறுவனம் அவருக்கான பங்கு விலைகளை மட்டும் அதிகரித்து, மற்ற பங்கு தாரர்களுக்கு குறைந்த விலையில் பங்குகளை விற்க முயன்றது.
பாய்சன் பில் இதை பாய்சன் பில் முறை என்று கூறுவார்கள். இந்த நிலையில்தான் எலான் மஸ்க் மொத்தமாக 44 பில்லியன் டாலர் ரொக்கமாக கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார். இதற்காக 21 பில்லியன் டாலர் சொந்த காசு. 12 பில்லியன் டாலர் பங்கு ரீதியான லோன்., டெஸ்லா மற்றும் ட்விட்டார் பங்கில் இருந்து மீதம் உள்ள தொகைக்கு மார்க்கன் ஸ்டான்லியில் லோன் வாங்கினார்.
இவர் ரொக்கமாக 44 பில்லியன் கொடுக்க பணத்தை ரெடி செய்த நிலையில்தான் ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் மீண்டும் அவரிடம் பேச முன் வந்தனர். இந்த நிலையில் நேற்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்களுடன் எலான் மஸ்க் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் முடிவில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் எலான் மஸ்க்.