மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவனிடம் (thirumavalavan)தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எடப்பாடி பழனிசாமி உடல்நலன் விசாரித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசிக கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான திருமாவளவன் நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சாதாரண காய்ச்சல் என தெரிவித்தனர்.உடல்நலம் தேறியுடன் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 ஆம் தேதிவரை கட்சி தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் என விசிக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமாவளவனிடம் நலம் விசாரித்துள்ளார்.