வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு உகந்த நாள். சுக்கிர வாரம் என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலக்ஷ்மியையும், அஷ்ட லக்ஷ்மியரையும் விரதம் இருந்து வழிபடவேண்டிய நன்னாள். சாந்த சொரூபினியையும் உக்கிர தேவதையையும் வணங்க வேண்டிய நாள்.
பொதுவாக ஒருவருக்கு ஏதேனும் நல்லது நடந்தால், பணம் காசு சேர்ந்தால், வீடு வாசல் வாங்கினால், ‘சுக்கிர யோகம்தான் உனக்கு’ என்று கூறுவார்கள். எனவே, வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டும் என்றால், மகாலக்ஷ்மியை மனதார வணங்கினாலே போதும்.
இதையும் படிங்க : August 23 Gold Rate : இன்றும் குறைந்தது தங்கம் விலை!!
வெள்ளிக்கிழமையில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி ‘அயிகிரி நந்தினி’ பாடலை பாடலாம். லலிதா சகஸ்ரநாமம் சொல்லலாம். ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ பாடலை பாடலாம். இவ்வாறு பாடுவதால், மனம் குளிர்ந்து போய் உங்கள் இல்லத்துக்கு அடியெடுத்து வைப்பாள் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி எனபது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில், துர்கை, காளி முதலான உக்கிர தெய்வங்களை விளக்கேற்றி வழிபடுவது, தீயசக்திகளை அழிக்கும். செய்யும் தொழிலில் எதிர்ப்புகள் இல்லாமல் தடைகள் நீங்கும். இதேபோல், மாலையிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
வெள்ளியன்று, விரதம் இருந்து மகாலக்ஷ்மியை வழிபட்டால் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவார்கள் என்றும் ஐதீகம்.