Gayathri Raghuram-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.
2014ஆம் ஆண்டில் இருந்து பாஜகவில் பயணம் செய்து வந்தவர் நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராம்.
அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்த காயத்ரி ரகுராம் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2020ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி புகார் கூறிய நிலையில், காயத்ரி பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தன்னை குறி வைத்து சமூக வலைதளத்தில் அட்டாக் செய்வதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக நிர்வாகிகள் சிலரை பாஜக தலைவர் அண்ணாமலை அனுமதி இன்றி நீக்கியாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி பதிவில் இருந்து நீக்கப்பட்டு 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.
காயத்திரி ராகுராம் (gayatri raghuram) தொடர்ந்து பாஜக கட்சி நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி,
களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனை அடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம், பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து தமிழக பாஜக தலைமையை டிவிட்டர் மற்றும் ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இதையும் படிங்க :‘சபரிமலைக்கு மாலை அணிந்தும்’..என்னை பற்றி.. – கொளித்திப்போட்ட காயத்ரி ரகுராம்..!!
மேலும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவிற்க்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வந்தார்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1748278302010388950?s=20
இந்த சூழலில், காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் மற்றும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் வலம் வந்தன.
இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்(Gayathri Raghuram) அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.