போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (RN Ravi )கருத்து தெரிவித்துள்ளார்.
554 வது குருநானக் ஜெயந்தி விழா இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது.சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் ஜியின் பிறந்த நாளை, குருநானக் ஜெயந்தியாக வருடம் தோறும் சீக்கிய மக்கள் கொண்டாடுகின்றனர்.
இது சீக்கிய சமூகத்தினரின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. குருநானக் ஜெயந்தி விழா இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள குருநானக் சத் சங்க அரங்கில் குருநானக் ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,தனது முப்பதாவது வயதில் ஞானம் பெற்ற குருநானக் மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைய முனைந்தார் .
மேலும் நாட்டில், சீக்கியா்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் சிறந்த சமூக சேவை செய்பவா்களாக விளங்கி வருகின்றனர்.சீக்கிய மதத்தில் குருமாா்களின் போதனைகளை சரியான முறையில் கடைப்பிடிக்கக்கூடிய மக்களாக சீக்கியா்கள் இருந்து வருகிறாா்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும் ,போர், வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான நேரத்தில் முன்நின்று அனைத்து உதவிகளையும் செய்யக்கூடியவர்கள் சீக்கியர்கள் என ஆளுநர் புகழாரம் தெரிவித்தார்.