தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்துவாங்க போவதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நாளை மற்றும் 30.12.2023 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.12.2023 தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஏற்கனவே தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்த நிலையில் தற்போது தான் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது அம்மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.