மயிலாடுதுறை உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில் :
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (நவ.25) கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் நவ.25, 26, 27 ஆகிய 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
Also Read : ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியானது..!!
இதுமட்டுமின்றி 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
கனமழை பெய்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.