டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை சூழ்ந்த நிலையில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இதில் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .
Also Read : விண்வெளி மையம் செல்லும் ககன்யான் வீரர் – அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு..!!
அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கினர். 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.