முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டபுதிய வகை ஸ்மார்ட் ரிங்கை சென்னை IIT வடிவமைத்துள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐஐடி, நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை டிஜிட்டல் கல்வியாக வழங்கி வருகிறது. பணப்பரி வர்த்தனை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வகையில் மூலம் சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு ‘மியூஸ் வியரபிள்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்து, இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்கிறது.
தற்போது ஸ்மார்ட் வாட்ச் போல, ‘ஸ்மார்ட் ரிங்’ ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.அந்த மோதிரம் மூலம் மனித உடல் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும் இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன், வெப்பநிலை, சுவாச வீதம், இதயத் துடிப்பு மாறுபாடு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை கணக்கிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸமார்ட் ரிங் செப். 27 முதல் சர்வதேச அளவிலும், இந்தியாவில் அக்.25 முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.