செப்டம்பர் 12 முதல் 18 வரை நடைபெற உள்ள சென்னை ஓபன் போட்டியில் யூஜெனி பவுச்சார்ட் வைல்டு தேர்வு செய்ய பட்டுள்ளார்.சென்னையில் முதல் முறையாக சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் கிட்டத்தட்ட 20 மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 மேற்பட்ட வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கவனிப்புகளானது தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மூலம், எந்த குறையும் இல்லாத வண்ணம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
பொதுவாகவே சென்னை ஓபன் போட்டிகள் மாலை 5 மணிக்கு தொடங்கப்படுவதால், உயர்தர மின் விளக்குகள் (flood lights) வெளிச்சத்தில், வெட்ட வெளியில் போட்டிகள் நடத்தப்படுவதால், வெளிச்சத்திற்கு பூச்சிகள் வருவதும், இதுபோன்ற சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தில் வண்டுகள் அல்லது பூச்சிகள் வருவது சகஜமான ஒன்று.
ஆனால் இது குறித்து மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள போட்டியாளர் கனடாவை சேர்ந்த ஜீனி பவுச்சர்டு தனது இன்ஸ்டாகிராமில் பதிவி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பயன்படுத்தும் வெள்ளை துண்டின் மீது, பூச்சி இருப்பது போன்றும், அது பார்ப்பதற்கு வண்டு போலவும், அதே சமையம் மூட்டை பூச்சி போலவும் காட்சியளித்த நிலையில், “Good luck in India?” என கேப்சன் போட்டு கேள்வி எழுப்பியிருந்தார் கனடா வீராங்கனை.
ஆனால் அவர் சொல்ல வருவது என்ன என்பதே அறியாத நிலையில், இதுகுறித்து அவரது தரப்பில் விசாரித்த போது மிகவும் சாதாரணமான ஒரு விளக்கத்தை அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது, அந்த புகைப்படத்தில் இருப்பது பெண் வண்டு எனவும், பெண் வண்டுகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக கருதுவதாகவும், எனவே தான் அந்த புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு இந்தியாவில் அதிர்ஷ்டம் வாய்த்துள்ளதோ? என கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளாராம் ஜீனி பவுச்சர்டு.
கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், இந்த சம்பவம் அவரது சுகாதாரத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.