சாப்ட்வேர் மற்றும் ஹேக்கிங் போன்றவற்றை நன்கு அறிந்த ஒரு ஐடி ஊழியரே, சைபர் குற்றவாளிகளால் ஒரே நாளில் 12 கோடியை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி ஐடி ஊழியரை தொடர்பு கொண்ட நபர், அவரது பெயரிலான செல்போன் நம்பர்கள் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையிலிருந்து விசாரணை அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார் என்று கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
Also Rea : சாம்பியன்ஸ் டிராபி தொடர் – பிப்.23ல் இந்தியா – பாக் அணிகள் மோதல்..!!
இதனால் ஐடி ஊழியர் பதற்றமாக இருப்பதை உணர்ந்த மோசடிக்கும்பல், அவரிடம் பல்வேறு தொலைபேசி எண்ணில் வந்து, பல்வேறு பிரச்சனைகளை கூறி, 12 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த IT ஊழியர் இது குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.