தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் (kajal aggarwal) தற்போது கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2020ல் தொழிலதிபர் கௌதம் கிச்சிலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், காஜல் அகர்வால் (kajal aggarwal) அளித்த பேட்டி ஒன்றில்..
“நான் கர்ப்பமாக இருந்தபோது மிகவும் குண்டாகி விட்டேன் என்றும், என்னை அப்போது அனைவரும் கேலி செய்தார்கள். என் மகன் பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றேன். அப்போதும் குழந்தையை விட்டுவிட்டு இப்படி நடிக்க போகலாமா? என்று விமர்சித்தர்கள்..
யார் என்ன நினைத்தாலும் என் மகனுக்கு தான் என் முதல் முக்கியத்துவம். முதல் முறையாக அவனை மார்போடு அணைத்த போது நன்றாக வளர்க்க முடியுமா? என்ற பயம் இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு என்னை சரி செய்து கொண்டு வருகிறேன்.
தினமும் காலையில் என் மகனை விட்டுவிட்டு படப்பிடிப்புக்காக செல்லும் பொழுது, என் மனம் வேதனையோடு தான் துடிக்கிறது. அதற்காக அவனை அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் இல்லை. நீலுக்காக நேரத்தை ஒதுக்கி கொள்வதும், அவனுக்கு அன்பை கொடுப்பதும், அவனுடைய நல்லது கெட்டது போன்ற விஷயங்களில் முக்கியத்துவம் அளிப்பதும் மட்டுமல்லாமல் என் பணியையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன். என் மகன் முன் நான் ஒரு பலமான தாயாக நிற்க ஆசைப்படுகிறேன்” என்றும் கூறியுள்ளார்