காவிரி நீர் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்ல, காவிரிஆற்றின் கடைமடை வரை செல்லும் தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன்(duraimurugan) தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்(duraimurugan) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மலைபோல நம்பிக் கொண்டிருந்த நிலையில்,”5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குக் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவை 15 நாட்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பால் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தியே தீர வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அவமதிப்புக்குக் கர்நாடக அரசு ஆளாகும்.
மேலும், எனவே கர்நாடக அரசு அந்த நிலைக்கு செல்லாது என நினைக்கிறோம். கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும்.நாங்கள் ஒட்டுமொத்த தண்ணீரை கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைதான் கேட்கிறோம். காவிரி நீர் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஆற்றின் கடைமடை வரை செல்லும் தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளது
(உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று ஆணையிட்ட உச்சநீதிமன்றம், இதைத் தவிர்த்து காவிரி பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.)