உபியில் கடத்தியவர்களிடம் இருந்து தப்பி 30 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்திடம் சேர்ந்த நபரின் செயல் பலரையும் உணர்ச்சிவசப்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் ராஜூ, பல போராட்டங்களுக்கு பின் அவரின் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.
Also Read : வாடகை தாயாக வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!
ராஜஸ்தானில் ஒரு துண்டு ரொட்டிக்காக வேலை செய்யுமாறு அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளார். பல முயற்சிகளுக்கு பின் அங்கிருந்து ராஜூ போராடி தப்பித்துள்ளார் .
இதையடுத்து போலீசாரின் உதவியை நாடிய ராஜூ தன்னை தனது குடும்பத்திடம் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார் இதையடுத்து சமூக வலைதளத்தின் மூலம் இவரின் குடும்பத்தினரை கண்டறிய போலீசார் உதவியுள்ளனர்.
7 வயதில் குடும்பத்தை பிரிந்த ராஜு 30 வருடங்களுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.