ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற 20 ஆண்டு கால போரின் போது பல்வேறு பகுதிகளில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட நிலையில், அவை செயலிழக்கப்படாமல் அப்படியே இருந்ததால் அவ்வப்போது வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடைபெற்றது. அந்த போரின் போது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசுக்கு எதிராக தலிபான்கள் ஆயுதப்போர் நடத்தினர்.
இந்நிலையில், இந்த போரில் தலிபான்கள் வெற்றிபெற்று ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பல்வேறு ஆயுதங்கள் அரசுப்படையினரால் கைவிடப்பட்டன.
அந்த ஆயுதங்களை எல்லாம் தற்போது தலிபான்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். மேலும், அப்போது நடைபெற்ற உள்நாட்டு போரின்போது பல இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், போருக்கு பின் அந்த கண்ணிவெடிகள் செயலிழக்கப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த நிலையில், அவ்வப்போது அந்த கண்ணிவெடிகள் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் காந்தகார் மாகாணம் மியன்ஷின் மாவட்டத்தில் நேற்று 2 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் பூமிக்கு அடியில் இருந்து உலோகத்தாலான ஒரு பொருளை எடுத்துள்ளான்.
மேலும், அது கண்ணிவெடி என்று அறியாத அந்த அப்பாவி சிறுவர்கள் இருவரும் அதை வைத்து விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிவெடி வெடித்துச் சிதறியது.
இதை, சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தலிபான்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.