கலைஞர், ஸ்டாலின் காலத்தில்தான் அதிக நிதி திருச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி உறையூர் பகுதிக்கு உட்பட்ட 8வது வார்டு லிங்க நகர் பகுதியில் திருச்சி வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்க லிமிடெட் சார்பில் புதிய நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், விஜயலட்சுமி கண்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணன்மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு
எல்லாருக்கும் அரிசி, புளி, மிளகாய், எல்லாம் ஒழுங்கா கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க என நகைச்சுவையுடன் தனது செய்தியாளர் சந்திப்பை துவக்கினார்.
திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சிக்கு எதுவும் செய்யப்படவில்லை கே என் நேரு சொல்வது பச்சை பொய் என கூறி கூறினார் என்ற கேள்விக்கு
நீங்கள் நிருபர்கள் தான் சொல்லுங்கள்,10 ஆண்டு காலத்தில் அவர்கள் நிறைவேற்றிய திட்டங்கள் சொல்லுங்கள்டி.என்.பி.எல் எம்ஜிஆர் காலத்தில் துவங்கியது. ஜெயலலிதா முதலமைச்சரின் தற்போது 2வது அலகு துவக்கினார்கள்.அது மட்டும் தான் செய்தார்கள் வேறு என்ன செய்தார்கள்.
அவர்கள் திருச்சி மாநகரத்துக்கு என்ன செய்தார்கள்.கலைஞர், தற்போது ஸ்டாலின் நிறைய செய்து இருக்கிறார்கள். கலைஞர் இருக்கும் பொழுது இன்ஜினியரிங் கல்லூரியில் வந்தது, புதிய மாவட்ட ஆட்சி அலுவலகம், கோர்ட்டு, தொட்டிபாலம் கட்டப்பட்டது.
தற்போது தளபதி காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய பஸ் நிலையத்திற்கு 350 கோடி, புதிய மார்க்கெட்டிற்கு நூறு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது மேலும் 600 கோடி ரூபாய் ஐடி பார்க்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் பாதாள சாக்கடை திட்டத்தை போட்டுவிட்டு போய்விட்டார்கள், ரோடு போடுவதற்கு பணம் தரவில்லை. பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு ரோடுகள் போடப்பட்டு வருகிறது.
10 வருடம் ஆட்சியில் இருப்பவர்களை விட கூடுதலாக நாங்கள் செய்திருக்கிறோம்.திருச்சி பொருத்தவரை 65வார்டுகளிலும் குடி தண்ணீர், சாலை வசதி ஆகிய எல்லாவற்றையும் கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதி என்று இல்லாமல் செய்து வருகிறேன். அனைத்து மக்களும் எங்களுக்கு ஆதரவு தந்துள்ளனர்.நீங்கள் என்ன செய்தி போட்டாலும் ஆகாது என்று நகைச்சுவையாக பேசினார்.