”சக்தி” என்ற இந்துக்களின் தெய்வீ சொல்லை ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டதாக பா.ஜ.கவினர் விமர்சித்து வந்த நிலையில் , அதற்கு காங்கிரஸ் MP ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
மணிப்பூரிலிருந்து மஹாராஷ்டிரா வரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாயப் பயணம் மேற்கொண்டார் . இந்த யாத்திரையானது மும்பையில் நிறைவடைந்தது. அதன் பிறகு நியாய யாத்திரையின் நிறைவு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,”
நாங்கள் ஒரு சக்திக்கு எதிராக போராடுகிறோம்.அது பிரதமர் மோடி தான். அந்த சக்தியின் முகமூடி என கூறியிருந்தார். ஆனால் சக்தி என்ற இந்துக்களின் தெய்வீ சொல்லை ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டதாக பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்து வந்ததனர்.
இந்த சூழலில் ,நான் சொன்ன சக்தி, நாம் போராடும் சக்தி, அந்த சக்தியின் முகமூடி மோடி என்று தான் தெரிவித்தேன் காங்கிரஸ் MP ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்.. பிரதமருக்கு எனது வார்த்தைகள் பிடிக்கவில்லை, நான் ஆழமான உண்மையைப் பேசினேன் என்பதை அவர் அறிந்திருப்பதால், எப்பொழுதும் ஏதாவது ஒரு வகையில் அவற்றைத் திரித்து அர்த்தத்தை மாற்ற முயற்சிக்கிறார்.
நான் சொன்ன சக்தி, நாம் போராடும் சக்தி, அந்த சக்தியின் முகமூடி, பிரதமர் மோடியை தான். அப்படிப்பட்ட ஒரு சக்திதான் இன்று இந்தியாவின் குரலை, இந்தியாவின் நிறுவனங்கள், சிபிஐ, ஐடி, இடி, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், இந்திய தொழில்துறை மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலமைப்பு அமைப்பையும் தன் பிடியில் பிடித்துள்ளது.
அதிகாரத்திற்காக, நரேந்திர மோடி ஜி இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார், அதே நேரத்தில் ஒரு இந்திய விவசாயி சில ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
அதே அதிகாரத்தை இந்தியாவின் துறைமுகங்கள், இந்தியாவின் விமான நிலையங்கள் என்று கொடுக்கும்போது, இந்தியாவின் இளைஞர்களுக்கு அக்னிவீரன் பரிசு வழங்கப்படுவது அவரது தைரியத்தை உடைக்கிறது.மேலும் அதிகாரத்திற்கு இரவும் பகலும் வணக்கம் செலுத்தும் போது, நாட்டின் ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன.
இதனை தொடர்ந்து அதிகாரத்தின் அடிமையான நரேந்திர மோடி ஜி, நாட்டின் ஏழைகள் மீது ஜிஎஸ்டியை திணிக்கிறார், பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல், அந்த சக்தியை அதிகரிக்க நாட்டின் சொத்துக்களை ஏலம் விடுகிறார். அந்த சக்தியை பிரதமர் நரேந்திர மோடியும் அங்கீகரிக்கிறார். அவர் எந்த வகையான மத சக்தியும் அல்ல,அவர் அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் சக்தி.
அதனால் தான் நான் அவருக்கு எதிராக குரல் எழுப்பும் போதெல்லாம் பிரதமரையும் அவரது பொய் இயந்திரமும் கொதிப்படைந்து கோபமடைகின்றன என்று தெரிவித்துள்ளார்.