MS Dhoni will surely field : நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங் ஆர்டரில் முன் கூட்டியே களமிறங்கி ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியின் போது பேசிய அவர்,
“தோனி ஒரு அணியில் இருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கான ஆதரவு அங்கு அமோகமாக இருக்கும்” என்றார்.
அதன் பின்னர் பேட்டிங் ஆர்டரில் தோனியின் பொசிஷன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
“கடந்த சீசனுக்கு பிறகு தோனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் முழு உடற்தகுதி பெற்று வருகிறார்.
அதனால் அவர் பேட் செய்ய முன்கூட்டியே களம் காண விரும்பவில்லை. ஆனால், பார்வையாளர்கள் அவர் பேட் செய்வதை பார்க்க விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க : MI-ஐ விட்டு வெளியேற முடிவெடுத்த ரோகித்.. ஹர்திக் -க்கு இறுதி எச்சரிக்கை!
அவரும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார், வரும் சீசனுக்காக அவர் சிறப்பான முறையில் தயார் ஆகியுள்ளார். அந்த வகையில் அவரிடமிருந்து சில ஹிட்களை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்” என பதிலளித்தார் மைக்கேல் ஹசி.
தற்போது தோனிக்கு 42 வயகும் நிலையில், நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார்.
சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் பேட் செய்யவில்லை. விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசியிருந்தார்.
இருந்தாலும் சென்னை அந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 2 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் எடுத்தார்.
இந்நிலையில், சென்னை அணி வருகிற 8-ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது MS Dhoni will surely field.
இதையும் படிங்க : நாளை தனி விமானம் மூலம் மதுரை வருகிறார் ஜே.பி.நட்டா!