நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் திங்கள்கிழமையன்று திருமணம் இனிதே நடைபெற்றது.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமண நிகழ்வில், நடிகர்கள் விஷால், கார்த்தி, துருவா சர்ஜா, ஜெகபதி பாபு, சமுத்திரகனி, கே.எஸ். ரவிக்குமார், ஜி.கே.ரெட்டி, எஸ்ஆர் பிரபு,
ஞானவேல்ராஜா, விஜய குமார், செந்தில், நாஞ்சில் சம்பத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
ஐஸ்வர்யா -உமாபதி இருவரும் காதலித்து வந்த நிலையில், நடிகர் அர்ஜூன் அண்மையில்தான் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
ஜூன் 10ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இரு நட்சத்திரங்களும் முக்கிய பிரபலங்களுக்கும், குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுத்துவந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை திட்டமிட்டபடி வெகு கோலாகலமாக ஐஸ்வர்யா – உமாபதி திருமணம் நடந்துள்ளது.
இந்தபுகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.