இந்தியாவின் 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.
கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தனிப்பெருமான்மை கிடைக்கவில்லை. ஆனால் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.பாஜக கூட்டணி கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் கூட்டணி கட்சிகளான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபா நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்பிக்களின் உதவியுடன் ஆட்சியை அமைக்க உள்ளார்.
இதையும் படிங்க: தார்மீக பொறுப்பேற்று செல்வகணபதி பதவி விலக முன்னாள் தலைவர் சாமிநாதன் வலியுறுத்தல்..!!
இந்த நிலையில் இந்தியாவின் 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‛‛உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி. இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன’ என்று பதிவிட்டுள்ளார்.