சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்ட வீடியோ ஒன்றை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதி முன்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ள சம்பவம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் கிடங்கில் குப்பைகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Hey #Chennai
Can you see the difference at the Perungudi dumpyard after #GCC expediting biomining works there?
The video also shows the consequent removal of all waste (RDF)at Perungudi near Pallikarani. (1/2)#ChennaiCorporation#HeretoServe#PasumaiChennai pic.twitter.com/CIvRzLgvyN— Greater Chennai Corporation (@chennaicorp) March 3, 2023
இதனை தொடர்ந்து பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படுவது குறித்த வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை மாநகராட்சி ட்விட்டரில், “பயோமைனிங் பணிகளை விரைவுபடுத்திய பிறகு பெருங்குடி குப்பைத் கிடங்கு முன்பு அப்பகுதி எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிடும் வகையில் வீடியோ ஒன்றையும் அவர்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.