கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்ற பழமொழிக்கு ஏற்ப பெண்கள் அனைவரும் தனது கணவரின் உடை ,மொழி, பேச்சு,குறைகளைக் கடந்து தன்னுடையவர் என்று ,எந்த நிலையிலும் தன்னை கணவரை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் வாழும் நம்மில் கணவரைத் திருநங்கைக்கு விட்டுக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கலஹண்டியில் காதலித்த திருநங்கையைக் கணவர் அவரது மனைவியின் சம்மதத்துடன் அவரை ‘திருமணம்’ செய்து ஒரே வீட்டில் வாழ முடிவு செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார்.
ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார். அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார்.
பஹிர் மனைவி தான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து கூறுகையில்,
இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும். இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
காதலித்த திருநங்கையைக் கணவர் அவரது மனைவியின் சம்மதத்துடன் அவரை ‘திருமணம்’ செய்து ஒரே வீட்டில் வாழ முடிவு செய்த சம்பவம் திருநங்கைகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும்,ஆனால் திருமணமான பெண்ணிற்கு இழைத்த துரோகம் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இது போன்ற திருமணங்கள் வடமாநிலங்களில் நடப்பது இயல்பு என்பது குறிப்பிடத்தக்கது.