கேரள மாநிலம் kerala கோழிக்கோட்டில் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல்போன்(phoneblast) வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஸ் ரஹ்மான், கோழிக்கோடு அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அவரது மொபைல் போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதில், காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.