100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
இந்த புகாரின் அடிப்படையில், ஷோபனா ,யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த சூழலில்,”நில அபகரிப்பு வழக்கில் எப்பொது வேண்டுமானாலும் தானும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சண்முக சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை விசாரித்தார். அப்போது வழக்கு விசாரணை 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதுங்கி இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.