விசிக திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாசிச பாஜக அரசின் சனநாயக படுகொலையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன்(Thirumavalavan) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன்:
நாடாளுமன்றத்தில் 140க்கும் மேற்பட்ட எம்பிக்களை இடைநீக்கம் செய்த பாஜகவின் பாசிச போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.மேலும் மக்களவையில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை இடைநீக்கம் செய்து பாஜக அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளது இது மோசமான முன்னுதாரணம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”பாராளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு அனுமதி சீட்டு வழங்கிய கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம் பி கதாப் சங்கீதம் இதுவரை விவரம் கேட்கவில்லை. அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவராக உள்ள அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.
அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்துறை செயலாளராக பதவி வகித்துள்ளார், இப்பொழுது இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்ததோடு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அவரே சேகரித்துள்ளார். இதன் மூலம் இந்த தீர்ப்பு ஒரு சார்பாக இருக்க கூடுமோ என்று எண்ணும் வகையில் தரவுகள் தெரிகிறது.
அயோத்தி வழக்கு உள்ளிட்ட அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புகளை பார்க்கும் பொழுது நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதன மயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது
விசிக சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த வெல்லும் சனநாயக மாநாடு மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைவர்களுடன் கலந்தால் வாசித்து மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.