பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் தென்மாவட்ட மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றாக கருதப்படும் சிலம்ப கலை மெல்ல மெல்ல அழிந்து வரும் சூழலில் அதனை ஊக்குவிக்கும் விதமாக சிலம்பாட்டம் போட்டி நடத்தப்பட்டது.
செல்போன், டிவி, கம்ப்யூட்டர் என மூழ்கிவிடாமல், மாணாக்கர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் சிலம்ப பயிற்சியை மேம்படுத்துவதற்காகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது.
சிலம்பப் போட்டியினை முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக்கண்ணு, நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி சேர்மன் அகமது யாசின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தனித்திறமை போட்டி மற்றும் அடிமுறை போட்டியும் நடைபெற்றது.
போட்டியில், பங்கேற்று முதல் மூன்று பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பையும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.