பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கமுதி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவியினை தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் -வசந்தி தம்பதியரின் மகள் காவிய ஜனனி.
இவர் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து காவிய ஜனனியை பெற்றோரும் அவரது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
மாணவியின் கல்வித் தரம் மேம்படுவதற்காக பல்வேறு அமைப்புகளும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கமுதி வட்டார தேவேந்திர குல வேளாளர் மண்ணுரிமை சங்கத்தின் சார்பாக மாணவிக்கு ரூ.25ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
பேரையூரில் உள்ள மாணவி காவிய ஜனனியின் இல்லத்துக்கு சென்ற சங்க நிர்வாகிகள் மாணவிக்கு நிதியுதவி வழங்கினர்.
முன்னதாக மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து அவரை கௌரவப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் கமுதி வட்டார தேவேந்திர குல வேளாளர் மன்னுரிமை சங்கத் தலைவர் கரிகாலன், செயலாளர் சித்திரைப் பாண்டி , பொருளாளர் கார்த்திகைச் சாமி மற்றும் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் – புட்டு புட்டு வைத்த ஓபிஎஸ்