கடந்த 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு மீறி நடத்தப்பட்டது . அந்த பொதுகுழு கூட்டத்தில் அணைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக கட்சியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அதேநேரம், அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அப்போது, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓ.பி.எஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்தார்.
அதில், அ.தி.மு.க.,வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.
அதாவது பொதுக்குழு, செயற்குழுவை இந்த ஆண்டு இனி கூட்ட முடியாது. ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். யாரும் தனியாக கூட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுடன் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதிமுக பொதுக்குழு கூட்ட சட்ட ஆணையரையும் நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பன்னிர்செல்வம் ஒருங்கிணைபாளர் என்ற பழைய நிலையே தொடரும் என தீர்ப்பளித்தது. தீர்ப்பு ஓ.பி.எஸ்ற்கு சாதகமாக வந்ததால் அவரின் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடினர்.
இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று ஓபிஎஸ் மரியதை செலுத்தினார். செய்தியாளருக்கு பேட்டியளியளித்த அவர், இந்த தீர்ப்பு குறித்து, “இது மிகவும் நல்ல தீர்ப்பு.. தொண்டர்களுக்கான தீர்ப்பு” என தெரிவித்தார். மேலும் கட்சி இனி எப்படி செயல்பட போகிறது என்ற கேள்விக்கு, “தொண்டர்களின் ஆதரவோடும், தமிழக மக்களின் அரவனைப்போடும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என கூறினார்.
தொடர்ந்து எடப்பாடியோடு சேர்ந்து பணியாற்ற தாயாரா என்ற கேள்விக்கு, “23-06-2022ற்கு முன் யார் எல்லாம் கட்சியின் பொறுப்பில் இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயார்” என பதிலளித்தார். இவரது சுகமான செய்தி எடப்பாடி பழனிசாமியை அழைக்கும் தகவலாக பார்க்கப்படுகிறது.