டி.கே.சீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டிசென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, டி.கே.சீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நூல்களை முதலமைச்சர் வெளியிட, அதை கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கொள்கையை காப்பாற்றுவதற்காக எதையும் இழக்கலாம் எனவும், பதவியை காப்பாற்றுவதற்காக எதையும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தனது தந்தை 'தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் அவர்களது எழுத்துகளை மீண்டும் அச்சேற்றியுள்ள டி.கே.எஸ்.இளங்கோவனை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
ஏற்கனவே நான் #TwitterSpaces-ல் சொன்னதுபோல், திராவிட இயக்க இளைஞர்கள் தங்களது எழுத்தாற்றலால் படைப்புகள் பல படைத்திட வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/0pkbRGmRCo
— M.K.Stalin (@mkstalin) November 24, 2022
மேலும், திமுக என்றால் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், முற்போக்குவாதிகள் நிறைந்து காணப்படும் இயக்கம் என குறிப்பிட்டார். மொத்தத்தில் இது ஓர் அறிவு இயக்கம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதையடுத்து, பேசிய முதலமைச்சர், தந்தை சீனிவாசனை போன்று, அவரின் மகன் டி.கே.எஸ்.இளங்கோவனும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவராக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார். சீனிவாசனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழாவில் பங்கேற்றுள்ளதாகவும் கூறினார்.