Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழா..!

by devagi
January 2, 2023
in ஆன்மீகம்
0
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழா..!

108 வைண தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (1ம்தேதி) காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.  இதையொட்டி தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வந்தடைந்தார்.

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் குடமுழுக்கு - பக்தர்கள் குவிந்து வருவதால்  பாதுகாப்பு தீவிரம் | Srirangam temple reform today - Tamil Oneindia

பின்பு  நம்பெருமாள் சுமார்1மணி நேரம் பக்தர்கள் தரினசம் செய்தனர். அதன்பின் காலை 7மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார்.

காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு
12மணியளவில் புறப்பட்டு மறுநாள் (3ம் தேதி) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.

108 வைணவ திவ்ய தேச உலா - 1. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் | 108  Vaishnava Temples - Srirangam Ranganathar - hindutamil.in

கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லட்சகணக்கான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து மாற்றமும் செய்யபட்டுள்ளது. மேலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: Devoteesnewssrirangam ranganathartamil naduTemplevaikunta ekadashiஸ்ரீரங்கம்-ரங்கநாதர்
Previous Post

நிர்வாணமாக இளம் பெண்ணை இழுத்துச் சென்ற கார்..! டெல்லியில் கொடூரம்!

Next Post

எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து – அலறியடித்து ஓடிய பயணிகள்-பரபரப்பு காட்சிகள்!

Related Posts

மொரிஷியஸ் நாட்டில் ஆன்மீக பயிற்சி அளித்து சிறப்புரையாற்றிய மஹாவிஷ்ணு..!!
ஆன்மீகம்

மொரிஷியஸ் நாட்டில் ஆன்மீக பயிற்சி அளித்து சிறப்புரையாற்றிய மஹாவிஷ்ணு..!!

March 5, 2025
Masal Vada
ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மசால் வடை பிரசாதம் – தேவஸ்தானம் அறிவிப்பு..!!

January 21, 2025
Tiruchendur beach
ஆன்மீகம்

திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த பொக்கிஷம் – வியந்து பார்த்த பக்தர்கள்..!!

January 13, 2025
Subrabadam
ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை..!!

December 16, 2024
Tiruvannamalai mahadeepam
ஆன்மீகம்

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!!

December 13, 2024
parking spaces
ஆன்மீகம்

திருவண்ணாமலை தீப விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 116 இடங்களில் பார்க்கிங் வசதி..!!

December 11, 2024
Next Post
எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து – அலறியடித்து ஓடிய பயணிகள்-பரபரப்பு காட்சிகள்!

எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து - அலறியடித்து ஓடிய பயணிகள்-பரபரப்பு காட்சிகள்!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com